அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி நாளை சென்னையை அடுத்த ஒக்கியம் பாக்கத்தில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் இப்போட்டியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைக்கிறார்.
மாநில காவல் துறையினருக்கு இடையிலான அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் கைத்துப்பாக்கி மற்றும் ரிவால்வர் மட்டுமே போட்டியில் பயன் படுத்தப்பட்டது. பின்னர் அதுவே, முழு அளவிலான அகில இந்திய போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியாக (AIPDM) நடத்தப்பட்டு வருகிறது. 1999-ஆம் வருடம் முதல் சுழற்சி முறையில் மாநில காவல்துறை அல்லது மத்திய போலீஸ் அமைப்பு களால் இப்போட்டி நடத்தப்பட்டு வந்தது. மாநில காவல்துறையினருடன் இந்தி யாவில் உள்ள மத்திய காவல்துறை அமைப்புகள், மத்திய ஆயுதப் படைகள் இந்த தொழில்முறை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கு பெறுகின்றனர்.
இந்த ஆண்டு தற்போது 23ஆவது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி (AIPDM) தமிழ்நாடு காவல்துறை நடத்துகிறது. அது செங்கல்பட்டு மாவட்டம், ஒத்தி வாக்க த்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதா னத்தில் 9.01.2023 முதல் 13.01.2023 வரை நடத்தப்படவுள்ளது. போட்டி யின் துவக்க விழா சென்னை வண்டலூரிலுள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் நடை பெறுகிறது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 9.01.2023 அன்று மாலை 04.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். 13ம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.
இப்போட்டியில், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்தியக் காவல் அமைப்பினர் என சுமார் 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் அதிகப்படியாக 40 காவலர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய குழுவினராக எல்லை பாதுகாப்பு படையினரும் அதனைத் தொடர்ந்து இந்தோ திபெத் எல்லை காவல் படையினர் 38 காவலர்களும், ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா 35 காவலர்களும், தமிழக காவல்துறையிலிருந்து 30 காவலர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.