2008ம் ஆண்டு பேட்ச் இறந்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூ. 19 லட்சம் நிதியுதவி: கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் சிறப்பாக பணிபுரிந்து குற்ற வாளிகளை கைது செய்த 5 காவல் அதிகாரிகள் மற்றும் காணாமல் போன 6 வயது சிறுவனை கண்டுபிடித்து கொடுத்த பொதுமக்கள் இருவரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும் இறந்த காவலரின் குடும்பத்திற்கு 2008 பேட்ஜ் காவலர்கள் அளித்த ரூ.19,00,951-க்கான காசோலையை காவலர் குடும்பத்தி னரிடம் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
சைதாப்பேட்டை பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 10.8 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்.
அடையாறு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Adyar) காவல் உதவி ஆய்வாளர் விமல், சிறப்பு உதவிஆய்வாளர் திருபராமன், தலைமைக்காவலர்கள் கௌதம், அச்சுதராஜ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 06.02.2023 காலை சைதாப்பேட்டை இரயில் நிலையம் அருகே கண் காணித்து, அங்கு நின்றிருந்த ஒரு நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும், கஞ்சாவை அஸ்ஸாம் மாநிலத் திலிருந்து ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச்சேர்ந்த ஆகாஷ், 26, ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி வழக்கில் சம்பந் தப்பட்டு தலைமறைவாகயிருந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நவீன் மண்டல், வ/22, த/பெ.சாஷி மண்டல் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10.8 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அண்ணாநகர் பகுதியில் வழி தெரியாமல் சுற்றி திரிந்த 6 வயது சிறுவனை கண்டுப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 நபர்களுக்கு பாராட்டு.
சென்னை, அண்ணாநகர் கிழக்கு, பகுதியில் வசித்து வரும் அசோக், வ/30, த/பெ. மணி எண்பவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறார். அசோக் கடந்த 07.02.2023 அன்று இரவு 8.30 மணியளவில் கடையிலிருந்த போது, அவ்வழியே 6 வயது சிறுவன் அங்கும் இங்கும் வழிதெரியாமல் சுற்றி திரிந்துள்ளார். இதனை கவனித்த மெக்கானிக் அசோக் மேற்படி சிறுவனை அழைத்து விசாரணை செய்து உணவு வாங்கி கொடுத்துள்ளார். மேலும் தனது நண்பரான P.விநாயகமூர்த்தி என்பவரிடம் தகவல் தெரிவித்து மேற்படி சிறுவனை K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அண்ணாநகர் போலீசார் விசாரணை செய்ததில் மேற்படி 6 வயது சிறுவன் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர்களது பெற்றோர் கொரட்டூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. கொரட்டூர் காவல் நிலையத்தில் மேற்படி சிறுவன் காணாமல் போனது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்ததின் பேரில் மேற்படி சிறுவனின் பெற்றோரை போலீசார் நேரில் வரவழைத்து சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அண்ணாநகர் பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவலருக்கு பாராட்டு.
நொளம்பூர் காவல் நிலைய சட்டம் & ஒழுங்கு பிரிவில் முதல் நிலைக்காவலரக பணிபுரியும் லட்சுமி, (மு.நி.கா.31032) என்பவர் நேற்று (10.02.2023) காலை 7.15 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த போது, வழியில் அண்ணாநகர், 6வது அவென்யூ பிரதான சாலையில், 2 இருசக்கர வாகனங்கள் மோதியதில் கால் எழும்பு முறிந்து இரத்த காயமடைந்த சங்கர், வ/42, த/பெ.ராஜராம், அகத்தியர் நகர், வில்லிவாக்கம் என்பவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தும், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி விரைவாக அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்பிவைத்தார். பெண் காவலரின் மனிதாபினமான இச்செயலை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர். விபத்து குறித்து V-5 திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறந்த காவலரின் குடும்பத்திற்கு 2008 பேட்ஜ் காவலர்கள் அளித்த ரூ.19,00951/-, க்கான காசோலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இறந்த காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் துறை, P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராக பணிபுரிந்த திருநாவுக்கரசு, (மு.நி.கா.28536) கடந்த 25.08.2022 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தை உள்ளது. மேற்படி காவலரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பணியாற்றும் 2008 பேட்ஜ் காவல் ஆளிநர்கள் அவர்களது சுய விருப்பத்தின் பேரில் மொத்தம் ரூ.19,00,951/- அளித்தனர்.
சிறப்பாக பணிபுரிந்த 5 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சாலையில் சுற்றி திரிந்த சிறுவனை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து பெற்றோரிடம் ஒப்படைக்க உதவிய 2 பொதுமக்கள் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (11.02.2023) நேரில் வரவழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும் இறந்த காவலர் திரு.திருநாவுக்கரசு குடும்பத்தினரையும் நேரில் அழைத்து 2008 பேட்ஜ் காவலர்கள் அளித்த ரூ.19,00,951/-க்கான காசோலை, சென்னை பெருநகர காவல் துறை சார்பாக ரூ.1,90,000 கொடுங்கையூர் காவல் நிலையம் சார்பாக ரூ.25,000/- ஆகிய காசோலைகளையும் வழங்கினார். மேலும் மேற்படி காவலரின் குடும்பத்திற்கு வரவேண்டிய பணப்பலன்களை விரைவில் வழங்கவும், அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்) மற்றும் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.