ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி தயாநிதி தலைமையில் சென்னையில் நடைபெற்ற 1976ம் ஆண்டு பேட்ச் உதவி ஆய்வாளர்களின் குடும்ப சங்கமவிழாவில் முன்னாள் டிஜிபிக்கள் நடராஜ், திலகவதி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
தமிழக காவல் துறையில் 1976ஆம் ஆண்டு பேட்ச் தமிழக மற்றும் புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளர்களின் 47ஆம் ஆண்டு குடும்ப சங்கம விழா 20.11.2022 அன்று சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூராயில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் டிஜிபிக்கள் ஆர். நடராஜ், திலகவதி மற்றும் ரயில்வே போலீஸ் கூடுதல் டிஜிபி வனிதா, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் முன்னாள் கூடுதல் அரசு செயலாளர் மற்றும் மாநில பிற்பட்டோர் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் வி. நாராயண சுவாமி, முன்னாள் தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் முன்னாள் காவல் துணைத்தலைவர் ரத்தின சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 1976 ஆம் ஆண்டு பேட்ச் உதவி ஆய்வாளர்கள் சங்கப் பொருளாளர் ஏகே தயாநிதியின் 10 வயது பேத்தி பிரபஞ்சனா ஸ்ரீநிவாஸ் நீண்ட ஆங்கில கதைகளை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும் மற்றொரு பேத்தி 3 வயது சிறுமி நிரஞ்சனா ஸ்ரீநிவாஸ் பொன்னியின் செல்வன் திரைப்பட பாடல் மேடையில் பாடி அனைவரையும் மகிழ வைத்தார். சிறுவன் முகுந்தின் சிறப்பான நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் தாங்கள் காவல் பயிற்சியின் போது அடைந்த பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பேசியவைகள் அனைவரையும் நெகிழ வைத்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி நயினார் முகமதுவின் ANM மெலேடிஸ்” குழுவினரின் இன்னிசையும் நடைபெற்றது. நிகழ்ச்சியினை சங்க உறுப்பினர் பாலுவின் துணைவியார் கலைச்செல்வி தொகுத்து வழங்கினார். இறுதியில் சங்க உறுப்பினர் அசோக்குமார் நன்றியுறை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொருளாளர் ஏகே தயாநிதி, செயலாளர் மோகன் மற்றும் சங்க பொருளாளர் சிவி தாமஸ் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.