Take a fresh look at your lifestyle.

ஆவடி காவல் ஆணையரக அதிரடி வேட்டையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

38

ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருளை அறவே ஒழிக்கும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பல்வேறு நடவடிக்கைகைள மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று நேற்று அம்பத்துர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் தனம்மாள் கஞ்சா வேட்டையில் திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகில் சுமார் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்த ஆவடி, வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் என்ற சூர்யா, (25), கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற குள்ளமணி, (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான சூர்யா 2018 ஆண்டு மதுரவாயல் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்த அம்பத்துர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் தனம்மாள் தனிப்படையினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.