Take a fresh look at your lifestyle.

14 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு

69

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காணாமல் போன சிறுவனை 36 மணி நேரத்தில் மீட்ட காவல் குழுவினர் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெரு நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக் கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக பின் வரும் சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.