136 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பாண்டு பத்திரம்: கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை
136 ganja accusedes under dicipilne bond agreement
சென்னை நகரில் ஒரே நாளில் 1452 போதைக்கடத்தல் ஆசாமிகளை தணிக்கை செய்து அதில் 136 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பத்திரத்தில் உறுதிமொழி வாங்கி கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை நகரில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளுக்கு போலீசார் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். இதில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,452 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டனர். நேற்று மட்டும் 136 குற்றவாளிகள் செயல்துறை நடுவர்களாகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இது வரை போதை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 381 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 396 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதாக சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.
சென்னை நகரில் குற்ற பின்னணி நபர்கள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருவதுடன், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.