Take a fresh look at your lifestyle.

125 கடைகளுக்கு மாநகராட்சி சீல்

139

சென்னையில் தொழில் வரி செலுத்தாமல் இருந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை நகரில் தொழில்வரி செலுத்தாத கடைகள் மீது சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.