ஆப்கானிஸ்தானின் ‘இந்து குஷ்’ மலைத்தொடரில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்தது என்றும். பூமிக்கு அடியில் 116 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்தில் மட்டுமே நிலநடுக்கம் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசரநிலை துறை செய்தித் தொடர்பாளர் பிலால் பைசி தெரிவித்துள்ளார். வடமேற்கு பாகிஸ்தானில் பாதிப்பு சற்று அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார். சில இடங்களில் பூகம்பத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது என்றார்.