Take a fresh look at your lifestyle.

ஸ்டூடண்ட் விசாவில் அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள்: தெலுங்கானா வாலிபர் கைது

fake document for student visa telungana person arrest

261

அமெரிக்காவிற்கு கல்வி பயில செல்வதற்காக, அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த தெலுங்கானாவைச் சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு அதிகாரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘அமெரிக்கா சென்று படித்து வருவதற்காக மாணவர்கள் விசா (Students VISA) பெறுவதற்கு தெலுங்கானாவைச் சேர்ந்த கர்ணம் சாய் திலீப் என்பவர் விண்ணப்பித்திருந்தார். நேற்று (20.05.2022) நடைபெற்ற நேர்க்காணலுக்கு அவர் வந்த போது அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. எனவே கர்ணம் சாய்திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. என தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் போலி ஆவணம் தடுப்புப்பிரிவு தனிப்படை போலீசார் உதவிக்கமிஷனர் விஜயசேகரன் தலைமையில் விசாரணை நடத்தினர். இதில் சாய் திலீப் சமர்ப்பித்த கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் போலி என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து தெலுங்கானாவைச் சேர்ந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விசாரணைக்குப் பின்னர், நேற்று (20.05.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.