புதுக்கோட்டை, இறையூர், வேங்கைவயலில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யப்படாத நிலையில் இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 40 நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 90 பேரிடம் நடத்திய விசாரணையில், பலர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இந்நிலையில், முன்னுக்கு பின் முரணாக பதி அளித்தவர்களிடம் பெற்ற வாக்குமூலங்களை ஆய்வுக்கு உட்படுத்தி சிபிசிசிடி போலீசார் விசாரனை நடத்த திட்டமிட்டுள்ளனர். அது தொடர்பாக சிபிசிஐடி தரப்பு கூறுகையில், ‘‘கடைசி கட்டத்தில் தான் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவுள்ளோம். இதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்கமுடியும். உண்மை கண்டறியும் சோதனையை பொறுத்தவரையில், டிஜிபியிடம் அனுமதி பெற்றபின், விரைவில் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.