Take a fresh look at your lifestyle.

வெளிநாட்டு பெண்ணுக்கு உதவிய நுண்ணறிவுப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர்: கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு

commissioner shankar jiwal ips gave reward chennai intelligence wing inspector jayasuda

195

கனடா நாட்டின் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆனிசைமன் (66). இவர் தனது உறவினர்களைப் பார்க்க கடந்த 17.04.2022 அன்று சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து சென்னை, வேப்பேரி பகுதியில் தங்கியுள்ளார். சுற்றுலா விசா காலாவதியானதை அவர் கவனிக்காமல் கடந்த 15.06.2022 அன்று கனடாவுக்குத் திரும்புவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார். அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியதால், அவரால் இந்தியாவை விட்டு வெளியேற முடியவில்லை.

 

இந்நிலையில் கடந்த 17.06.2022 அன்று காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்காக காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயசுதா FRROவின் நடைமுறைகளை அவருக்கு எளிதாக விளக்கி, FRRO அலுவலகத்திற்கு சென்று முறையிடும் படி தகுந்த ஆலோசனை கூறி அனுப்பியுள்ளார்.

அவரது ஆலோசனையின்படி, அவர் FRRO அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அதன் பின்னர் காவல் ஆணையாளர் அலுவலக பாஸ்போர்ட் பிரிவை அணுகி முறையாக சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார். காவல் ஆணையாளர் அலுவலக பாஸ்போர்ட் பிரிவு அதிகாரிகள் முறையாக ஆவணங்களை சரிபார்த்து அந்த பெண்மணியை விசாரணை செய்து தகுதியின்படி கடந்த 24.06.2022 அன்று காவல் துறை அனுமதிச்சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனிசைமன் FRRO அலுவலகத்தில் காவல்துறை அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பித்து இந்தியாவை விட்டு வெளியேறும் அனுமதியை பெற்று கடந்த 06.07.2022 அன்று கனடா நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

தனது சொந்த நாடு திரும்பிய பெண்மணி ஆனிசைமன் சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயசுதாவின் பணியை மனமாற பாராட்டி இ-மெயில் மூலம் காவல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனையடுத்து ஆய்வாளர் ஜெயசுதாவின் இந்த மெச்சத்தகுந்த பணியை பாராட்டி கமிஷனர் சங்கர்ஜிவால் அவரை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.