விளையாட்டுப் போட்டிகளில் வென்ற அமைச்சுப்பணியாளர்களை பாராட்டிய கமிஷனர் சங்கர்ஜிவால்
shankar jiwal rewarded ministry staffs to win the sports games
தமிழகத்தில் மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய குழுவினர் பங்கு பெற்றனர். இந்தப் போட்டிகளில் பூப்பந்து (Batmitton), இறகுபந்து (Shuttle cock), கேரம், மேசை பந்து (Table Tennis), பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான சுழல் கோப்பையை வென்றனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் குழுவினரை (31.05.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.