விமான நிலையத்தில் காணாமல் போன பயணியின் செல்போனை 24 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த கமிஷனர் சங்கர்ஜிவால்
சென்னை விமான நிலையத்தில் பயணியின் செல்போனை திருடி அதனை விற்ற கால் டாக்சி டிரைவரை புகார் வந்த 24 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு கல்லூரி மாணவர் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை, பிராட்வேயைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப் (வயது 60). நேற்று முன்தினம் இலங்கை யில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் யூபர் கால் டாக்சியில் அதிகாலை 5.30 மணிக்கு விமான நிலையம் சென்றார். காரில் சென்ற போது ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காரின் டேஷ்போர்டு மேல் வைத்திருந்தார். பன் னாட்டு விமான நிலையம் சென்றதும் காரில் இருந்து இறங்கி பின்னால் இருந்த லக்கேஜை எடுத்தார். பின்னர் டிரைவரை சிறிது நேரம் காத்திருங்கள் என்று சொல்வ தற்குள் கால் டாக்சி டிரைவர் டேஷ்போர்டில் வைத்திருந்த உமர் ஷெரிப்பின் செல் போனுடன் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டார். கார் சென்ற பிறகுதான் தனது செல்போனை காரில் விட்டது, உமர் ஷெரிப்புக்கு தெரியவந்தது.
அவர் உடனடியாக தனது மனைவியின் செல்போன் மூலம் தனது செல்போன் எண்ணுக்கு போன் செய்த போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அந்த செல்போனில்தான் கால் டாக்சியின் பதிவெண் மற்றும் அனைத்து விவரங்களும் இருந்தன. அது காணாமல் போன தால் உமர் ஷெரிப் மிகவும் அவதியடைந்தார். இலங்கைக்கு செல்ல விமானத்துக்கும் நேர மாகி விட்டதால் அவர் இது குறித்து தனது மகன் கல்லூரி மாணவர் முகமது முஆத்திடம் தகவல் தெரிவித்து விட்டு இலங்கைக்கு சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முகமது முஆத் விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் நடவடி க்கை எடுப்பதற்கு தாமதம் ஆக்கியதோடு, கால்டாக்சி நிறுவனத்தில் சென்று விசாரியு ங்கள் என்று அலட்சியம் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முகமது முஆத் தனது நண்பர் ஒருவர் மூலம் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக கமிஷனர் சங்கர்ஜிவால் பரங்கிமலை துணை ஆணையர் தீபக் ஸ்வாச்சுக்கு அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். அதனையடுத்து செல்போனுடன் சென்ற கால்டாக்சி டிரைவரை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி விமான நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டிக்கு உத்தரவு பறந்தது. தனிப்படை போலீசார் உடனடியாக களம் இறங்கி கால்டாக்சி டிரைவர் சேலையூரில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கேரளாவைச் சேர்ந்த அந்த டிரைவரைப் பிடித்து விசாணை நடத்தினர். அவன் முதலில் தான் செல்போனை எடுக்க வில்லை என்று கூறியுள்ளான். பின்னர் போலீசார் அறையை சோதனை நடத்திய போது அங்கு முஆத்தின் தந்தை செல்போனின் கவர் மட்டும் கிடந்துள்ளது. அதனையடுத்து போலீசார் கேரளா வாலிபரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை போட்ட போது செல்போனை எடுத்தது தான்தான் என்றும் ரூ. 350க்கு குரோம்பேட்டையில் உள்ள ஒருவரிடம் விற்றது தெரியவந்தது.
உடனடியாக அங்கு சென்ற போலீசார் செல்போனை மீட்டனர். அதனை முகமது முஆத்திடம் ஒப்படைத்தனர். தனது தந்தையின் செல்போன் மீண்டும் கிடைத்ததால் சந்தோஷம் அடைந்த கல்லூரி மாணவர் முஆத் இலங்கைக்கு சென்றிருந்த தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அவர் மகிழ்ச்சியடைந்தார். உரிய நேரத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தனது தந்தையின் செல்போனை மீட்டுக் கொடுத்த கமிஷனர் சங்கர்ஜிவாலுக்கு கல்லூரி மாணவர் முஆத் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளனர். முஆத் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் 2ம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். அவரது பதிவு வைரலாகி வருகிறது.