சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட மலைப் பாம்பு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணியின் மீது அதிகாரி களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த பார்சல்களை பிரித்து சோதனை செய்த போது, அதில் அரிய வகை குரங்கு குட்டிகள் 3, மலைப்பாம்பு குட்டிகள் 45, அரிய வகை பாம்புகள் 8, நட்சத்திர ஆமைகள் 2 இருந்தன. அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை மீண்டும் பாங்காக்குக்கு திருப்பி அனுப்பினர். பாம்புகளை கடத்தி வந்தவரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.