Take a fresh look at your lifestyle.

விபத்தில் சிக்கிய 7 வயது சிறுவனின் உயிரைக் காத்த ஐடி பெண் ஊழியர்: வேலூர் டிஐஜி முத்துசாமி பாராட்டு

38

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலை, வசூர் ஊத்துக்கோட்டை அம்மன் கோயில் எதிரே இன்று மாலை 4.45 மணியளவில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டன.

டிஐஜி முத்துசாமி

இதில் வாகனங்களில் பயணம் செய்த 7 வயது ஆண் குழந்தை மற்றும் அந்தக் குழந்தையின் தந்தை மற்றும் மற் றொரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 பேரும் பலத்த காய மடைந்தனர். அப் போது அந்த வழியாக சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் கீதா என்பவரும் அவரது 16 வயது மகனும் வாணியம்பாடி திருமண வரவேற்பில் கலந்து கொண்டு அவர்களது காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள், விபத்தைக் கண்ட இருவரும் உடனே கீழே இறங்கி விபத்தில் காயமடைத்த 7 வயது குழந்தை உள்ளிட்டவர்களை மீட்டு காலதாமதமின்றி முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

எஸ்பி ராஜேஷ் கண்ணன்

அந்த சமயத்தில் வேலூர் டிஐஜி முத்துசாமி மற்றும் எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அந்த வழியாக வந்தனர். நிலைமையைக் கண்ட அவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். காயமடைந்த குழந்தையை கீதா தனது கைகளால் தூக்கிச் சென்று மீட்டு எஸ்பியின் வாகனத்தில் ரத்தினகிரி சிஎம்சி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார். கீதாவின் இந்த மனிதநேய செயலை டிஐஜி முத்துசாமி வெகுவாக பாராட்டினார். இது போன்ற விபத்தில் சிக்கியவர்களை கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் நேரத் துக்குள்ளாக மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களது உயிரைக்காக்கலாம் என டிஐஜி முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.