Take a fresh look at your lifestyle.

விபத்தில் காயம்: எஸ்ஐயை நேரில் பார்த்து ஆறுதல் சொன்ன டிஜிபி சைலேந்திரபாபு

91

சென்னையில் நடந்த வாகன சோதனையின் போது விபத்து ஏற்பட்டு காயமடைந்த எஸ்ஐயை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் பலத்த காயமடைந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை எஸ்ஐ பொன்ராஜ் வீட்டுக்கு சென்றார். அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் காவல்துறை செய்து தரும் என்று தெரிவித்து, எஸ்ஐக்கு ஆறுதல் தெரிவித்தார்.