Take a fresh look at your lifestyle.

விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து 50 நாட்களில் ரூ. 6.50 கோடி அபராதம் வசூல்

RS 6,50 crore fine amount collected from traffick violant vehicles

70

சென்னை போக்குவரத்துப் போலீசாரால் தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை மற்றும் அழைப்பு மையங்கள் மூலம் 50 நாட்களில் ரூ. 6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப்போக்கில் மோசமடைந்தது. இந்தச் தேக்க நிலையை நேர் செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அவர்கள் கடந்த 11.04.2022 அன்று 10 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார்.

அண்ணாநகர் TROZ மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டறை ANPR கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன. இந்த 12 காவல் அழைப்பு மையங்களின் செயல்திறன் 50 நாட்கள் செயல்பாடாக 12.04.2022 முதல் 31.05.2022 வரை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் காரணமாக கடந்த 50 நாட்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 066 பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகை ரூபாய் 1 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 970 விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 67 வாகன ஓட்டிகள் 100 க்கும் அதிகமான விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தினார்கள். ஒரே வாகன ஓட்டி அவருடைய ஒரே வாகனத்திற்காக 274 விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.