விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் மாஸ்டர் மெகா வெற்றி பெற்றது.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன் களாக 6 பிரபல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அதன்படி, பிக்பாஸ் 6-வது சீசனில் கலந்து கொண்ட ஜனனி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காத்திருங்கள் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.