‘விகடன்’ பாலசுப்ரமணியனின் மனைவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினும், கவர்னர் ஆர்.என். ரவியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விகடன்’ குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் சீனிவாசனின் தாயாரும், மறைந்த பால சுப்ரமணியனின் துணைவியாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலை இயற்கை எய்தினார் என்றறிந்து வேதனை அடைந்தேன். அன்பு அன்னையை இழந்து தவிக்கும் சீனிவாசன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கவர்னர் ஆர். என்.ரவி வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘தங்களின் அன்பு தாயார் திருமதி. சரோஜா பாலசுப்பிரமணியன் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனை அடைந்துள்ளேன். இந்நேரத்தில் நானும், எனது துணைவியார் லட்சுமி ரவியும் ஈடு செய்ய முடியாத தங்களின் தாயாரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் அளிக்குமாறும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் ஆண்டவனிடம் பிரார்த்திகிறோம்’ என்று கூறியுள்ளார்.