Take a fresh look at your lifestyle.

வானில் பறந்த மர்மப் பொருள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

103

அமெரிக்க வான்வெளியில் மீண்டும் ஒரு மர்மப் பொருள் அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 4 ம் தேதி சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் தங்கள் நாட்டுடையதுதான் வானிலை ஆய்வுக்காக தனியார் நிறுவனம் அனுப்பியது திசை மாறி அமெரிக்க வான் எல்லைக்குள் வந்துவிட்டது என்று சீனா விளக்கமளித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த அமெரிக்க அந்த உளவு பலூன் கடலின் மீது பறந்த போது சுட்டு வீழ்த்தியது. அதிபர் ஜோ பிடனின் உத்தரவின் பேரில் எப் 16 ரக போர் விமான மூலம் இந்த மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

தொடர்ந்து 11 ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்ம பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியது. கனடா நாட்டின் எல்லையை ஒட்டி யுகோன் மாகாணத்தின் அருகே அடுத்தடுத்த நாட்களில் 2 மர்மப் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த 4 மர்மப் பொருட்களிலும் முதன்முதலில் வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் தான் மிகப்பெரியது.

அமெரிக்காவை தொடர்ந்து, அதன் அண்டை நாடான கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யூகோன் பிராந்தியத்தின் வான்வெளியில் பல ஆயிரம் அடி உயரத்தில் அந்த மர்ம பொருள் பறந்து கொண்டிருக்கிறது என கனடா ராணுவம் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து அந்த மர்ம பொருளை உடனடியாக சுட்டு வீழ்த்த அந்த நாட்டின் அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவிட்டார். அதன்படி அமெரிக்கா-கனடாவின் வான் வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது.