சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் மீது ஆட்டோவை மோதி விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, நந்தம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் கடந்த 3.04.2022 அன்று இரவு 7.15 மணியளவில் மவுண்ட் பூந்தமல்லி ரோட்டில் உள்ள எல்&டி நிறுவனம் எதிரே வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்த முயன்றார். ஆனால் ஆட்டோவில் வந்த நபர் ஆட்டோவை நிறுத்தாமல், உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பினார். நிலை தடுமாறி கீழே விழுந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜை அருகிலிருந்த காவலர்கள் மீட்டு சிசிக்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து புனித தோமையர்மலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விபத்தை ஏற்படுத்திய போரூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுதர்சன் (65) என்பவரை கைது செய்தனர்.