Take a fresh look at your lifestyle.

வலிமையான தலைவர் இருப்பதால் இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்கிறது

78

மோடி போன்ற வலிமையான தலைவர் பிரதமராக இருப்பதால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

சென்னை, சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று கூறினார். இதை குலைப்பதற்கு மதம், இனம், சாதி என்ற பெயர்களில் தொந்தரவுகள் வரக்கூடும் என்றும், நாம் அவற்றை கவனமாக எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.