Take a fresh look at your lifestyle.

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் த்ரில்லர் படத்தின் புது அப்டேட்

115

‘மஹா மூவிஸ்’ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் ‘சபரி’ படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நிறைவு செய்துள்ளதாக அறி விக்கப் பட்டுள்ளது. கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக் கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.

இப்படத்தை ‘மஹா மூவிஸ்’ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், மகரிஷி கொண்டலா வழங்குகிறார். வரலக்‌ஷ்மி சரத்குமார் இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் படக்குழு முடித்துள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் அனில் கட்ஸ் கூறியதாவது, “படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை. இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும்” என்றார்.