வனத்தோட்டக்கழகத்தின் பங்கு ஈவு தொகை ரூ. 8.63 கோடி: முதல்வரிடம் வழங்கினார் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2021–22ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 8 கோடியே 63 லட்சத்து 25 ஆயிரத்து 334 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார். அப்போது அவருடன் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் யோகேஷ் சிங் ஆகியோர் இருந்தனர்.