Take a fresh look at your lifestyle.

வண்டலூர் தனியார் கல்லூரியில் போதை விழிப்புணர்வு முகாம்

73

சென்னை வண்டலூரில் உள்ள கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் போதை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைகளில் போதைப்புழக்கத்தை அறவே ஒழிக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை, வண்டலூரில் உள்ள கிரசண்ட் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடந்த இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமலாக்கப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், தாம்பரம் இணைக்கமிஷனர் மூர்த்தி மற்றும் கிரசண்ட் கல்லூரி பேராசிரியர் முனைவர் முருகேசன் மற்றும் பதிவாளர் ராஜா உசேன் ஆகியோர்கள் கலந்து கொண் னர். 9000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில் கமிஷனர் அமல்ராஜ் பேசும் போது, ‘‘தமிழக அரசு போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறது. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களை தமிழக அரசின் போதை பொருள் எதிர்ப்பு நடவடிக் கைகளின் நல்லெண்ண தூதுவர்களாக அவர்களை செயல்பட செய்ய வேண்டும். மேலும் மகேஷ்குமார் அகர்வால் பேசும் போது, போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகளும் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமுதாயத்தில் படும் கஷ்டங்கள் குறித்தும் கூறினார். மேலும் போதை பழக்கத்தினால் ஆளானவர்களை வெறுத்து ஒதுக்காமல், அவர்களை அன்போடும் பரிவோடும் அணுக வேண்டும். அவர்களுக்கு தகுந்த மறுவாழ்வு சிகிச்சை அளித்து, இயல்பான வாழ்க்கைக்கு மீண்டு வர வேண்டும். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆயுத்கான் நன்றியுரை கூறினார்.