Take a fresh look at your lifestyle.

வடகிழக்கு பருவமழை முதற்நிலைப் பணிகள்: ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆலோசனைக் கூட்டம்

59

சென்னை, அக். 23–

வடகிழக்கு பருவமழை தொடர்பான முதற்நிலைப் பணிகள் குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வட கிழக்கு பருவமழைக்கான பல்வேறு முதல்நிலைப் பணிகளைத் தயார்படுத்துவது குறித்து ஆய்வு ய்வதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (22.10.2022) ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கட்டுப்பாட்டு அறை மற்றும் அவசரகால செயல்பாட்டு மையத்தின் உறுப்பினர்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு சரக எல்லைக்குட்பட்ட டேபிள் டாப் பயிற்சிகள் மற்றும் மாக் டிரில்கள் விரைவில் நடத்தப்படும். இக்கூட்டத்தில் திருமதி.பி.விஜயகுமாரி, இ.கா.ப., கூடுதல் காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் திரு.ஏ.பி. மகாபாரதி, மாவட்ட துணை ஆட்சியர், திருவள்ளுர் மாவட்டம் மற்றும் ஆவடி மாநகராட்சி, சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு & மீட்புப் பணிகள், மெட்ரோ நீர் வாரியம், மின் வாரிய துறை, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் & செயல் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.