Take a fresh look at your lifestyle.

வங்கிக் கொள்ளை வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய காவல் குழுவினருக்கு சைலேந்திரபாபு பாராட்டு

chennai arumbmakkam bank robbery case spl team rewarded by DGP sylendrababu IPS

120

சென்னை அரும்பாக்கம் FED Bank தங்க நகை கொள்ளை வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அனைத்து தங்க நகைகளையும் மீட்ட சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் அன்பு (வடக்கு) தலைமையிலான காவல் குழுவினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

கடந்த 13.08.2022-ந் தேதி மதியம் 02.30 மணியளவில் அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வங்கி கிளை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் வங்கி அலுவலகத்தில் அலுவலில் இருந்த ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த Strong Room சாவியை பறித்து வங்கி ஊழியர்களை ஓய்வு அறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் Strong Roomல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் சுமார் ரூ. 15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட தங்க நகை ஆபரணங்களை கொள்ளையடித்தனர். பின்பு வங்கி ஊழியர்களில் இருவரை Strong Room-ல் வைத்து பூட்டி விட்டு அதன் சாவியுடன் கொள்ளயர்கள் தப்பி சென்றனர். இந்த கொள்ளை தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு, இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி மற்றும் அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார் ஆகியோரின் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை செய்தனர்.

அதனையடுத்து இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 30), பாலாஜி, முருகன், சூர்யபிரகாஷ், செந்தில்குமரன், அமல்ராஜ், ஸ்ரீவட்சன் (எ) வட்சன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31.7 கிலோ தங்க நகைகள், 3 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், 1 நகை உருக்கும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தங்க நகைகளை மீட்ட சென்னை கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் அன்பு, இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணைக்கமிஷனர் ராஜராம், கோாயம்பேடு துணைக்கமிஷனர் குமார் ஆகியோரை டிஜிபி சைலேந்திரபாபு இன்று நேரில் அழைத்து கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் பாராட்டினார்.

மேலும் தனிப்படையில் முக்கியப் பணியாற்றிய உதவிக்கமிஷனர்கள் அருள் சந்தோஷமுத்து, ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர்கள் பரணிதரன், பிரபு, கோபாலகுரு, பூபாலன், உதவி ஆய்வாளர்கள் நிர்மல்ராஜ், பன்னீர்செல்வம். பெனாசீர் பேகம், தலைமைக்காவலர் குழந்தைவேல் காவலர்கள் பிரித்விராஜ், சாலமோன்ராஜ், முகமது சலாவுதீன், மணிகண்ட ஐயப்பன், ஆகியோரும் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் நேரில் வெகுமதிகள் பெற்றனர்.