Take a fresh look at your lifestyle.

வங்கிக் கொள்ளையில் சூப்பர் ஆக்சன்: 48 பேர் அடங்கிய தனிப்படைக்கு சபாஷ் சொன்ன சங்கர்ஜிவால்

Commissioner shankar jiwal, IPS Gave reward arumbakkam police spl team

60

சென்னை, அரும்பாக்கத்தில் பெடரல் வங்கிக் கொள்ளையில் திறமையாக கொள்ளையர்களை கைது செய்த கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையிலான தனிப்படையினரை கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

 

இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி

கடந்த 13.08.2022-ந் தேதி மதியம் 2.30 மணியளவில் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் இயங்கி வரும் பெடரல் வங்கியில் மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 31 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை நகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு மற்றும் இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சிசிடிவி கேமரா உதவியுடன் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தோஷ் உள்பட 7 பேரை 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

துணைக்கமிஷனர் விஜயகுமார்

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தங்க நகைகளை மீட்டதற்காக கூடுதல் கமிஷனர் அன்பு, இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணைக்கமிஷனர் ராஜாராம்,

கோயம்பேடு துணைக்கமிஷனர் குமார்

கோயம்பேடு துணைக்கமிஷனர் குமார் மற்றும் உதவிக்கமிஷனர்கள் அருள் சந்தோஷமுத்து, ரவிச்சந்திரன், ரவி, ரமேஷ்பாபு மற்றும் 11 காவல் ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 19 காவல் ஆளிநர்கள் என மொத்தம்

கொளத்தூர் துணைக்கமிஷனர் ராஜாராம்

48 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் வரவழைத்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வெகுமதி வழங்கி பாராட்டினார்.