Take a fresh look at your lifestyle.

ரூ. 2 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு: கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

RS 2 cr drugs destroided top cop shannkar jiwal ips action

84

சென்னை பெருநகர காவல்துறையில் போதை பொருட்கள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் நீதிமன்ற ஆணையின்பேரில், எரித்து அழிக்கப்பட்டன.

போதை பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட பொருட்களை வைப்பதற்கான இட வசதி கருதியும், வழக்கு தொடர்புடைய போதை பொருட்களை உரிய முறைப்படி அழிக்க குழுக்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யா பாரதி தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் நாகஜோதி மற்றும் தடயவியல் துறை துணை இயக்குநர் ஆகியோரை உறுப்பினராக கொண்டு குழு அமைக்கப்பட்டது.

 

இக்குழுவினர் போதை பொருள் வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்து, உரிய மாதிரிகள்(Samples), புகைப்படங்கள் (Photos) எடுக்கப்பட்ட பின்னர் நிலுவையிலுள்ள 13 வழக்குகளில் கைப்பற்ப்பட்ட 1,026 கிலோ எடை கொண்ட கஞ்சா போதை பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது. மேலும், போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த 55 வழக்குகளில் மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு 274 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன்சுகர் ஆகியவற்றை அழிக்க உத்தரவு பெறப்பட்டு, மொத்தம் 68 வழக்குகளில் 1,300 கிலோ கஞ்சா மற்றும் 30 கிராம், ஹெராயின், பிரவுன் சுகர் போதை பொருட்களை அழிக்க கனம் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது.

நேற்று (25.06.2022) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலையில், நீதிமன்ற ஆணைகளின் படி உத்தரவுப்பெற்ற மொத்தம் 1,300 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 30 கிராம் ஹெராயின் பிரவுன்சுகர் ஆகிய போதை பொருட்களை செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆபத்தான இரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சிறப்பு குழுவினர் மூலம் ஆய்வு செய்து எடை சரிபார்க்கப்பட்டு, 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.