Take a fresh look at your lifestyle.

ரூ. 1.50 கோடி நகைகளை நேர்மையாக ஒப்படைத்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

91

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

1. அண்ணாநகர் பகுதியில் தங்க நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு மயங்கி விழுந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, சுமார் 2.75 கிலோ தங்க நகைகளை பாதுகாத்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் குழுவினர்.

சென்னை பெருநகர காவல், மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்த் 12.12.2022 அன்று மாலை சுமார் 5.45 மணியளவில், அண்ணாநகர் பாடி மேம்பாலம் வழியாக சென்றார். அப்போது, ஒரு நபர் சாலையில் ரத்தக்காயத்துடன் அருகில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து கிடந்ததை கண்டு, காவல் வாகனத்தை நிறுத்தினார். அருகில் சென்று பார்த்தபோது, அந்த நபர் முகம் முழுக்க ரத்தக்காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விபத்து ஏற்பட்டு, சாலையில் விழுந்ததை உணர்ந்து, உடனே, காவல் வாகன ஓட்டுநர் முதல்நிலைக் காவலர் தீபன் சக்கரவர்த்தி உதவியுடன் காயடைந்த நபரை அந்த வழியாக வந்த குட்டி யானை சரக்கு வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அந்த நபரின் அருகிலிருந்த பையை பார்த்தபோது, அதில் ஏராளமான புதிய தங்க நகைகள் கவர்களில் இருந்தது தெரியவந்து, அவரது தங்க நகைகள் அடங்கிய பை, செல்போன் மற்றும் மணிபர்சு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காயமடைந்த நபரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். காயமடைந்து மீட்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விரைவாக மருத்துவமனையில் சேர்த்ததின்பேரில், காப்பாற்றப்பட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் இது குறித்து அண்ணாநகர் உதவி ஆணையாளரிடம் தெரிவித்து, கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை ஒப்படைத்தார்.

அண்ணாநகர் உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில், அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், பெண் காவலர் வசந்தா ஆகியோர் விசாரணை செய்தனர். அப்போது காயமடைந்த நபர் பெயர் ஹரிஹரன் (54) என்பதும் மேற்கு மாம்பலம் என்பதும், தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருவதும், புழல் பகுதியில் உள்ள தங்க நகை பட்டறையில் இருந்து சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2.75 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மேற்படி தங்கநகை கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அண்ணாநகர், பாடி மேம்பாலம் அருகே விபத்து ஏற்பட்டு இரத்தக் காயமடைந்து மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி நகைக்கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்து, அவரை வரவழைத்து, உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் சுமார் 2.75 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் ஹரிஹரனின் உடைமைகள் அவரது வசம் ஒப்படைக்கப்பட்டது.

* வீடு புகுந்து திருடிய குற்றவாளி கைது. 11 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.

சென்னை, போரூர், காரப்பாக்கம், தர்மராஜா நகர், 7வது தெருவில் வசிக்கும் நடராஜன் (70). வழக்கம் போல 15.11.2022 அன்று இரவு தூங்கி மறுநாள் (16.11.2022) காலை பார்த்தபோது, கதவு திறந்திருந்து, வீட்டில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து, நடராஜன் கொடுத்த புகாரின்பேரில், மதுரவாயல் காவல் நிலைய த்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், தலைமைக் காவலர் விஜயகுமார், முதல் நிலைக் காவலர்கள் மணிகண்டன், சதிஷ் மற்றும் காவலர் சீனிவாசகன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் சம்பவத்தன்று தங்கநகைகள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை செய்ததையடுத்து இந்த திருட்டில் ஈடுபட்ட ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (31) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து நடாஜன் வீட்டில் திருடிய 11 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

* ஆதம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 இளஞ்சிறநார்கள் பிடிபட்டனர்.

சென்னை பெருநகர காவல், ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ், 24.11.2022 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, விடியற்காலை சுமார் 3.30 மணியளவில் (25.11.2022) ஆதம்பாக்கம், கருணீகர் தெருவிலுள்ள ஒரு கடையின் ஷட்டரை உடைத்து 3 வாலிபர்கள் திருட முயன்றுள்ளனர். அதனைக் கண்டு, அவர்களை பிடிக்க சென்றபோது, 3 வாலிபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பியோடவே உடனே கனகராஜ் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஆதம்பாக்கம் ரோந்து வாகன பொறுப்பு அதிகாரி/ உதவி ஆய்வாளர் சபரிநாதன் மற்றும் தலைமைக் காவலர் விக்ரமன் ஆகியோர் தீவிர ரோந்து மேற்கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்களை பிடித்தபோது, 3 நபர்களும், மேற்படி கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர்கள் என தெரியவந்ததின்பேரில், பிடிபட்ட 3 இளஞ்சிறார்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஏழுகிணறு பகுதியில் நடந்து சென்ற வடமாநில நபரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற 2 ஆதம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 இளஞ்சிறநார்கள் பிடிபட்டனர்.

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் (19), கொத்தவால்சாவடி பகுதியில் பானிபூரி கடையில் வேலை செய்து அங்கேயே தங்கி வருகிறார். சந்தீப், தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்டிரல் இரயில் நிலையம் செல்ல 5.12.2022 அன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில், கொண்டித்தோப்பு, சுந்தரமுதலி தெரு மற்றும் அம்மன் கோயில் தெரு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 2 நபர்கள் சந்தீப்பிடம் பேச்சுக் கொடுத்து அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணம் ரூ. 300 ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு சற்று தொலைவில் இரவு ரோந்து பணியிலிருந்த யானைகவுனி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு அதிகாரி/ உதவி ஆய்வாளர் திரு.ரமணபாபு மற்றும் முதல்நிலைக் காவலர் பிரவீன்குமார் (மு.நி.கா.43567) ஆகியோர் துரத்திச் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பிரதீப் (20), மற்றும் சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்து, ஏழுகிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் இருந்து சந்தீப்பின் 1 செல்போன் மற்றும் பணம் ரூ.300/- பறிமுதல் செய்யப்பட்டது.

யானைகவுனி பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பிடித்த முதல்நிலைக் காவலர்

கார்த்திக் கர்மோஜர் என்பவர் கடந்த 2.12.2022 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில், எடைபாளையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் கார்த்திக் கர்மோஜர் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றார். இது குறித்து கார்த்திக் கர்மோஜர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், இரவு ரோந்து பணியிலிருந்த யானைக்கவுனி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பிரவீன்குமார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட சபீர் (18) என்பவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து, சபீர் யானைகவுனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

திரு.வி.க.நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை பிடித்த காவல் குழுவினர்

சென்னை, திரு.வி.க.நகர் காவல் நிலைய காவலர்கள் மனோஜ்குமார், வில்சன் ஆகியோர் 3.12.2022 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தனர். அப்போது, அதிகாலை சுமார் 2 மணியளவில் (04.12.2022) திரு.வி.க.நகர், நாகம்மமாள் தெருவில் இருந்த 2 நபர்கள் காவலர்களை கண்டதும் தப்பிக்க முற்படும்போது, காவலர்கள் துரத்திச் சென்று ஒரு நபரை இருசக்கர வாகனத்துடன் பிடிக்கவே, மற்றொரு நபர் மற்றொரு இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றார். விசாரணையில் பிடிபட்ட நபர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் (29) என்பதும், தப்பிச் சென்ற நபர் இம்மானுவேல் (19) என்பதும் இருவரும் சேர்ந்து செம்பியம் காவல் எல்லையில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில், மேற்படி நாகம்மாள் தெருவில் மற்றொரு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்றபோது ஒருவர் பிடிபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில், சுதாகர் கொடுத்த தகவலின்பேரில், தப்பிச் சென்ற இம்மானுவேலை கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.