Take a fresh look at your lifestyle.

ரூ. 1.36 கோடியில் டயாலிசிஸ் மையம்: அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

79

சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மருத்துவ சேவை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களின் நலனுக்காக 7 டயாலிசிஸ் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 80 டயாலிசிஸ் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் தற்போது நாள்தோறும் 372 நபர்கள் டயாலிசிஸ் செய்து பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 33,525 டயாலிசிஸ் சுழற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் டயாலிசிஸ் இலவசமாக செய்யப்படுகிறது. டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. காப்பீடு இல்லாதவர்களுக்கு டயாலிசிஸ் சேவை சென்னை மாநகராட்சியே வழங்குகிறது.

இந்த டயாலிசிஸ் மையங்கள் சென்னை ரோட்டரி கிளப், டேங்கர் அறக்கட்டளை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நிறுவப்பட்டுள்ளன. மைய ங்களில் உள்ள டயாலிசிஸ் இயந்திரங்கள் ரோட்டரி சங்கங்களால் வழங்கப்படுகின்றன. டயாலிசிஸ் மையங்கள் டேங்கர் அறக்கட்டளையால் இயக்கப்படுகின்றன. மேலும், டயா லிசிஸ் மையத்திற்கான இடம், மருத்துவ பராமரிப்பு, நீர், ஆய்வக ஆய்வு, மருத்துவக் கழிவு மேலாண்மை, மின்சாரம், பராமரிப்பு போன்ற சேவைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 8வது டயாலிசிஸ் மையமாக தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்தி ரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் இந்த டயாலிசிஸ் மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 12 டயாலிசிஸ் இயந்திரங்கள், ஆர்.ஓ. வடிப்பான்கள் மற்றும் பிற தேவையான துணைப் பொருட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னை யின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலை நோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இன்று 3 மாதங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.