Take a fresh look at your lifestyle.

ராயப்பேட்டை எஸ்விஎம் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய சிறார் உதவி காவல்துறைப் பிரிவு

403

சென்னை ராயப்பேட்டை எஸ்விஎம் பள்ளி மாணவர்களுடன் தமிழக அரசின் சிறார் உதவி காவல்துறைபிரிவு அதிகாரிகள் கலந்துரையாடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டை, கவுடியா மடம் சாலையில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தமிழக அரசின் சிறார் உதவி காவல்துறைப் பிரிவு (Juvenile Aid Police Unit, Egmore) அதிகாரிகளான சிறப்பு துணை ஆய்வாளர் செல்வம், சிறப்பு துணை ஆய்வாளர்கள் மீனாட்சி, வேதவள்ளி மற்றும் தலைமைக்காவல் வரலட்சுமி – தலைமைக் காவலர், முதல்நிலைக் காவலர் ஈஸ்வரி- ஆகியோர் தலைமையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்வது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், முடித்திருத்தம் செய்யாமல் இருப்பது போன்ற ஒழுங்கீனமற்ற செயல்களின் பின்விளைவுகள் பற்றி காவல் அதிகாரிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடையில் வந்து நன்கு கல்வி பயின்று நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோருக்கும் பள்ளிக்கும் நற்பெயரைத் தேடித் தர வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.
சிறார் உதவி காவல்துறைப் பிரிவினர் பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்வு சிறக்க அவர்களுடன் நேரில் கலந்துரையாடியது பயனுள்ளதாக அமைந்திருந்தது என்று பள்ளி முதல்வர் வேதா சீனிவாசன் நன்றி தெரிவித்தார். மேலும் காவல் சிறார் காவல் துறையினர் அடிக்கடி பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் கலந்து உரையாடினால் அவர்களது எதிகாலம் சிறக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.