சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியில் படிக்கும் குழந்தை களின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டனர். விழாவின் போது பள்ளியின் முதல்வர் வேதா சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். அதனையடுத்து பள்ளிக் குழந்தை களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினைத் தொடர்ந்து ‘ஆர்க்ரே ஹெல்த்கேர்’ நிறுவனத்தினர் சார்பில் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சந்திரசேகர் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் பள்ளி ஆசிரியர்களுக்கும், விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள், தாத்தா பாட்டி ஆகியோர்களுக்கும் இலவசமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உயரம், எடை போன்ற பரிசோதனைகள் செய்தனர். இறுதியில் நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.