Take a fresh look at your lifestyle.

ராயபுரத்தில் போதை மாத்திரைகள் விற்ற தந்தை, மகன், மருமகன் கைது

109

சென்னை, ராயபுரம் பகுதியில், உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த, தந்தை, மகன், மருமகன் ஆகிய 3 நபர்களை போலீசார் கைது- செய்தனர். அவர்களிடம்  இருந்து 60 நைட்ரவேட் உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive  against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்ப வர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தலைமை யிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (18.12.2022) காலை, இராயபுரம், மெட்ரோ வாட்டர் பில்லிங் ஸ்டேஷன் அருகிலுள்ள சுரங்க பாதை அருகில் கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேக த்தின் பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள்  சட்டவிரோதமாக உடல்வலி நிவா ரண மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த ஏழுகிணறு, வீராசாமி தெருவைச் சேர்ந்த அர்ஜுன், இவரது தந்தை ஜெய்சங்கர் மற்றும் ஜெய்சங்கரின் மருமகன் ஷாகில் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து நைட்ரவிட் (Nitravet) என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் -60 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (18.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.