ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி அல்லது பாக் நீரிணை இடையே இடையே தொடர்ச்சியான சுண்ணாம்பு கற்களால் ஆன மேடுகள் அமைந்துள்ளன. குறை ந்த ஆழத்தில் இருக்கும் இந்த சுண்ணாம்பு மேடுகள் ஒரு பாலம் போல தோற்றம் தரு கின்றன. ஆகையால் இதனை புராண இதிகாசமான ராமாயணத்துடன் இணைத்து ‘‘ராமர் பாலம்’’ என்று புராணம் கூறுகிறது. ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பால கட்டமைப்பு பாதிக்கப்படும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டாக அமைந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது என்று கூறினார்.இதைத் தொடர்ந்து, ராமர் பாலம் வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய பிப்ரவரி முதல் வாரம் வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறை வேற்றுவது குறித்து முதலமைச்சரால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த நிலைபாடு எடுத்திருப்பது முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது.