ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (08.02.2023) காலை சுமார் 10 மணி யளவில் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வி. D.V கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான கிரண் ஸ்ருதி ஐதராபாத்தில் உள்ள ஐபிஎஸ் பயிற்சி அகாடமியில் சிறந்த ஐபிஎஸ்சுக்கான விருதை தட்டிச் சென்றவர். ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழ்நாடு ஐபிஎஸ் கேடெர் கிரண் ஸ்ருதி 2020ம் ஆண்டு சிறந்த தகுதிக்கான ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டது தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருநகர காவல்துறையில் சைபர்கிரைம் துணைக்கமிஷனராக பொறுப்பு வகித்த கிரண் ஸ்ருதி சைபர்கிரைம் தொடர்பாக பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு துப்பு துலக்கியவர் என்ற பெருமைக்குறியவர்.