Take a fresh look at your lifestyle.

ராகுல்காந்திக்கு பூங்கொத்து கொடுத்த நாய்கள்

70

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னி யாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை நடக்கும் இந்த பாதயாத்திரை கேரளம், கர்நாடகம், மராட்டியம் என பயணித்து தற்போது மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் போது தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை லிசோ, ரெக்ஸி என்ற பெயர் கொண்ட நாய்கள் பூங்கொத்து வரவேற்றனன. ‘சலே கதம், ஜூட் வதன்” மற்றும் நப்ரத் சோடோ, பாரத் ஜோடோ என்ற செய்திகள் அடங்கிய பூங் கொத்து களைக் கூடையாகப் பிடித்து காந்தியிடம் கொடுத்தன. இதனை பார்த்த ராகுல்காந்தி ஆச்சர்யம் அடைந்தார். பூங்கொத்துகளை பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் நாய்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.