Take a fresh look at your lifestyle.

ரவுடிக்கு 1,080 நாள் ஜெயில்: திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவு

DCP Triplicane Deshmuk shekar sanjai, ips., bound down gangster Ganja Moorthy @ Krishnamoorthy for 1080 days

130

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 3 ஆண்டுகால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட மெரினா காவல் நிலைய ரவுடிக்கு 1,080 நாட்கள் பிணையில் வரமுடியாத ஜெயில் தண்டனை விதித்து துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணி, சிவராஜபுரத்தில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (எ) மூர்த்தி (எ) கஞ்சா மூர்த்தி (வயது 36). ரவுடியான இவர் மீது மெரினா காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகள் லிஸ்ட்டில் பெயர் உள்ளது. மேலும் இவர் மீது 1 கொலை முயற்சி, 5 கஞ்சா வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி கடந்த 29.08.2022 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 3 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி கடந்த 4.9.2022 அன்று இரவு அவரது சகாக்களுடன் சேர்ந்து பழனியம்மன் கோயில் 2வது தெருவில் கார்த்திக் என்பவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். அது தொடர்பாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதனையடுத்து கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

3 ஆண்டுகாலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியதால் செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ரவுடி கிருஷ்ணமூர்த்தியை கு.வி.மு.ச.பிரிவு 107ன் கீழ் நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 3 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையில் இருந்த நாட்கள் கழித்து, மீதமுள்ள 1,080 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து இன்று (21.09.2022) உத்தரவிட்டார். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.