ரவுடிக்கு 1 ஆண்டு ஜெயில்: அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார் உத்தரவு
Annanagar deputy commissioner vijayakumar ips., bound down one History Sheeter Loose Karthik for violated promissory bond
ஒரு வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட அமைந்தகரை ஹிஸ்டரி ஷீட் ரவுடியை 1 ஆண்டு சிறையில் அடைத்து அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டார்.
சென்னை, அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர், 17வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் (எ) லூசு கார்த்திக் (28). அமைந்தகரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 4 கொலை வழக்குகள், 1 கொலை முயற்சி வழக்கு, 2 கஞ்சா வழக்குகள் உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கார்த்திக் கடந்த 9.05.2022 அன்று அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார்.
தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் கார்த்திக் கடந்த 27.08.2022 அன்று ரமேஷ் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளார். அது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கார்த்திக் நன்னடத்தை பிணை ஆவண ஒப்பந்தத்தை மீறியதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அண்ணாநகர் துணைக்கமிஷனர் உத்தரவிட்டார். அதாவது 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியதால் 110ன் கீழ் நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 238 நாட்கள், பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து இன்று (12.09.2022) துணைக்கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரி கார்த்திக் (எ) லூசு கார்த்திக் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.