Take a fresh look at your lifestyle.

ரவுடிகளைக் கண்காணிக்கும் புதிய ‘ஆப்’ Track KD: டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்தார்

88

தமிழக காவல்துறையில் ரவுடிகளை கண்காணிக்கும் புதிய ‘ஆப்’பான “TrackKD” என்ற புதிய செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகளை கண்காணிக்கும் புதிய செயலி ஒன்று தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தமிழக காவல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், மதுரை கமிஷனராக இருந்த பிரேம்ஆனந்த் சின்ஹா (தற்போது சென்னை நகர கூடுதல் கமிஷனர்) தலைமையிலான போலீஸ் குழு இந்த செயலியை திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர். இந்தச் செயலியின் முதன்மை நோக்கம் சரித்திரப் பதி வேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்குவதாகும், இதன்மூலம் மாதந் தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப் பையும் உறுதி செய்கிறது. குற்றவாளிகளின் மீதான குற்றப்பத்திரிக்கை விபரங்கள், எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப் பட்டுள்ளனர், பிணை பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவை யில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்த முடியும். இச்செயலி, காவல் அதிகாரிகளுக்கு அவர்களின் விரல் நுனியில் பல்வேறு விவரங்களை வழங்குகிறது. மேலும் இந்த செயலில் 39 மாவட்டங்கள் மற்றும் ஆணையரகங்களில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட குற்றவாளி களின் சரித்திரப்பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. கேடிகளை கண்காணி ப்பது மற்றும் பழிவாங்கும் கொலைகளில் ஈடுபடும் குற்ற வாளிகளின் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க இது பெரிதும் உதவும்.

இந்த செயலியானது காவல்துறையினருக்கு ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க உதவுகிறது. இந்த செயலியை சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அறிமுகப்படுத்தினார். ரவுடிகளை எளிதில் அடையாளம் காண உதவும் இந்த இந்த செயலியின் அறிமுகம் காவல்துறை தரப்பில் வரவேற்பை பெற்றுள்ளது.