Take a fresh look at your lifestyle.

ரயில் பயணிகளை தாக்கிய விழுப்புரம் நபர் கைது: ரயிலில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் கடும் தண்டனை: ஏடிஜிபி வனிதா எச்சரிக்கை

115

கடந்த 16.02.2023 அன்று தமிழ்நாடு எல்லைக்குள் ஒரு ரயில் பயணி தனது சக பயணியை கைகளால் அடிப்பதாகவும், அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாகவும், மொ ழியை வைத்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து வேலை வாய்ப்புகளை எடுத்துக்கொள்வதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

அது தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் 153A, 323 மற்றும் 294 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அந்த காணொலியை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரயில்வே போலீஸ் சைபர்கிரமை் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மகிமைதாஸ், (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினர் இல்லை என்பதும், ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் உடன் பயணம் செய்யும் வட இந்திய பயணி இடித்து விட்டதாலும் தான் வேலைக்கு செல்லும்போது உணச்சிவசப்பட்டு மற்ற மாநிலத்தை சேர்ந்த சக பயணிகளை அடித்ததாக தெரிய வந்தது.  ரயில் பயணத்தின் போது பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் மற்றும் மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே ஏடிஜிபி வனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரயில் பயணிகளின் பயணம் பாதுகாப்பாக அமைய தமிழ்நாடு ரயில்வே காவல்துறை ரயில்வே பாதுகாப்பு படையுடன் (RPF) இணைத்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட சென்னை சென்ட்ரல் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினரை ஏடிஜிபி வனிதா வெகுவாக பாராட்டினார். 24×7 உதவி மைய எண். 1512, மற்றும் வாட்ஸ்அப் எண். 9962500500 செயல்பாட்டில் உள்ளது. ரயில்களில் காவலர்கள் பயணிகளின் பாதுகாப்பிற்காக உடன் பயணிக்கின்றனர். ரயில் நிலையங்களில் பெண்கள், சிறார்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பிற்கு காவலர்கள் ரோந்து பணியில் உள்ளனர். பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24×7 உதவி மைய எண். 1512 ஐ தொடர்புகொள்ளலாம் ரயில்வே போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.