Take a fresh look at your lifestyle.

ரஜினிக்கு தடை போட்ட வருணபகவான்

77

அண்ணாத்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலிப்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், சிவராஜ் குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆதித்யராம் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ஜெயில் செட்டில் நடைபெற்று வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமே சென்னையில் பெய்த கனமழை தான் என்று கூறுகிறார்கள். மேலும், தற்போது மீண்டும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.