Take a fresh look at your lifestyle.

யூ டியூப்பில் வைரலாகும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், IPS எழுதிய பாடல்

thambaram police commissioner amalraj IPS youtube song

128

தாம்பரம் போலீஸ் அமல்ராஜ், இரவு ரோந்து புரியும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு பாடலை எழுதி அதற்கு இசையமைத்து அதனை தமிழ்நாடு காவல்துறை சார்பாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அமல்ராஜின் யூடியூப் பக்கமான Amal Raj IPS என்ற முகவரியில் அது வைரலாகி வருகிறது.

அந்த பாடலின் வரிகள் இதோ….

 

இரவு பொழுது துவங்குது

இரவுப் பொழுது துவங்குது – புது
நிலவு நம்மை அழைக்குது –
உடல் மயக்கம் உறக்கம் மறந்து நாமும்

மகிழ்ந்து ரோந்து செல்லுவோம்

 

இரவுப் பொழுது துவங்குது – புது
நிலவு நம்மை அழைக்குது – உடல்
மயக்கம் உறக்கம் மறந்து நாமும்

மகிழ்ந்து ரோந்து செல்லுவோம்

 

நம் பாதங்கள் என்றென்றும்
உரிமையைக் காத்திடும்

வரும் காலங்கள் ஒவ்வொன்றும்

மகிழ்வினைக் கண்டிடும்

நம் தியாகம் என்றும் பெருமை தந்திடும்.

நெஞ்சே நெஞ்சே காவல் நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே ஓ… காக்கும் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே காவல் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே ஓ… காக்கும் நெஞ்சே

இரவுப் பொழுது துவங்குது –
புது நிலவு நம்மை அழைக்குது
உடல் மயக்கம் உறக்கம் மறந்து நாமும்

மகிழ்ந்து ரோந்து செல்லுவோம்

 

குற்றத்தின் வேரினை, நாம் துணிவுடன் அகற்றுவோம்

சட்டத்தின் வழியிலே, நாம் மகிழ்வுடன் செல்லுவோம்
இரவெல்லாம் உழைப்போம், விழிப்புடனே காப்போம்,
துயரங்கள் தடுப்போம் நெஞ்சே – ஓ…
நம் தியாகம் என்றும் பெருமை தந்திடும்

ஓ… நெஞ்சே நெஞ்சே காவல் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே ஓ… காக்கும் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே காவல் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே ஓ… காக்கும் நெஞ்சே

ஊரும் உறவும் உறங்குது
நம் உழைப்பை நம்பி இருக்குது
நாம் இணைந்து துணிந்து குற்றம் தடுத்து

இயல்பு வாழ்வைப் பேணுவோம்

காலை கதிர்கள் உதிக்குது
புதுக் கனவில் உலகம் மிதக்குது
நாம் மறந்து கடந்த ஓய்வை விடுத்து

மீண்டும் பணியைத் தொடருவோம்

 

நெஞ்சே நெஞ்சே காவல் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே ஓ… காக்கும் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே காவல் நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே ஓ… காக்கும் நெஞ்சே