Take a fresh look at your lifestyle.

யூடியூப் சேனல்கள் மீது நடிகர் சரத்குமார் கமிஷனரிடம் புகார்

114

தனது குடும்பத்தைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது நட வடிக்கை எடுக்கும்படி நடிகரும் சமத்துவ கட்சித் தலைவருமான சரத்குமார் போலீஸ் கமிஷனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அது தொடர்பாக சரத்குமார் அளித்துள்ள புகார் மனு விவரம்: கடந்த சில தினங்களாக        News Cricket (https://www.youtube.com/@newcricketnews/videos) Tamilan TV (https://www.youtube.com/@ tamilantv3135/videos) ஆகிய 2 சேனல்களும் என்னைப் பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும், கலைத்துறையினரைப் பற்றியும் தவறாக சித்தரித்து, இழிவுப்டுத்தும் வகையில் வீடியோவினை வெளியிட்டிருக்கிறது. கலைத்துறையினர் பலரையும் இழிவுபடுத்தி, உண்மைக்கு புறம்பாக கற்பனை செய்திகளை தவறான நோக்கத்தில் தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பதை தாங்கள் மேற்கண்ட லிங்கில் காணலாம். எனது புகழுக்கு வீணான களங்கம் கற்பித்து, தனிப்பட்ட முறையில் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந் தாலும் அதி விரைவில் கண்டறிந்து மிகத்தீவிர நடவடிக்கை எடுக்குமாறும், திரைத் துறையினரை முகத்திரைக்கு பின்னின்று தவறாக சித்தரிக்கும் இதுபோன்ற யூடியூப் சேனல்களை முடக்கிடவும் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.