Take a fresh look at your lifestyle.

யாழ்ப்பாணம் சென்ற ராஜபக்சே உருவப்படங்களை செருப்பால் அடித்த ஈழத்தமிழர்கள்

107

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சீரழிவுக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கை முடிவுதான் காரணம் என்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

தற்போது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையாக போராடி வருகிறார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கை முடிவுதான் காரணம் என்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் மீது அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று ஒரு நாள் பயணமாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் அவரது வருகைக்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈழத்தமிழர்கள் போராட்டம், சாலை மறியல்களில் ஈடுபட்டனர். மேலும் அவரது உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை செருப்பால் அடித்து அவமரியாதை செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அடித்து விரட்டினார்கள். பலர் கைது செய்யப்பட்டனர்.