Take a fresh look at your lifestyle.

மேலும் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

36

தமிழகத்தில் இன்று மேலும் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் தீவிர புயலாக இருந்து பின்னர் வலுவிழுந்தது. இதனால் கரையை கடந்தபோது புயலாகவே அது கரையை கடந்தது. இதனால் பாதிப்பு குறைவாக இருந்தது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், நள்ளிரவில் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 12ம் தேதி மற்றும் 14ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று வட தமிழகம், புதுச்சேரியில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.