Take a fresh look at your lifestyle.

மேலப்பாளையம் மகான் பஷீர் அப்பா தர்காவில் 228ம் ஆண்டு கந்தூரி உரூஸ் விழா

185

நெல்லை, மேலப்பாளையம், மகான் பஷீர் அப்பா தர்காவில் 228ம் ஆண்டு கந்தூரி உரூஸ் பெருவிழா வெகு விமரிசையாக நாளை நடக்கிறது.

நெல்லை, மேலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ‘ஞானமாமேதை ஆஷிகே ரசூல் முஹ்யி த்தீன் பஸீர் அப்பா’ தர்காவில் ஆண்டு தோறும் இஸ்லாமிய மாதம் ரஜப் பிறை 19 அன்று கந்தூரி விழா விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பஷீர் அப்பா தர்காவின் 228வது ஆண்டு உரூஸ் கந்தூரி நினைவு நாள் பெருவிழா நாளை சனிக்கிழமை (11.02.2023) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை சுபுஹு தொழுகையில் குர்ஆன் ஷரீப் ஓதப்பட்டு 6 மணியளவில் கந்தூரி விழா தொடங்குகிறது. பின்பு மாலை 5 மணிக்கு தாயிரா, தப்ஸ் முழங்க சந்தனக்குடம் பஷீர் அப்பா தெரு, பூலி புதுத்தெரு வழியாக வீதி உலா வந்து பஸீர் அப்பா தர்காவை வந்தடைகிறது. தர்காவின் ஆஸ்தான 5வது கலீபா டி.ஓ. அபுபக்கர் சாஹிபு காதிரிய்யுல் ஜிஸ்தி தலைமையில் பஸீர் அப்பா பரம்பரை கொடி மேடையில் இரவு 8 மணிக்கு கொடி ஏற்றி துஆ இறைஞ்சுதல் செய்யப்பட்டு நேர்ச்சை வழங்கப்படுகிறது.

மேலும் இரவு 9.30 மணியளவில் துணை கலீபா ஹாஜி எஸ்எம்எஸ் முத்துவாப்பா, மேலப் பாளையம் கல்வத்து தைக்கா மற்றும் மற்றும் யஹ்யா மவுலானா ஜும்ஆ பள்ளிவாசல் முத்தவல்லி கேஎம்எஸ் முத்துவாப்பா என்ற சதக் அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையில் பஸீர் அப்பா ரவுலா ஷரீப்பில் சந்தனம் பூசி போர்வை போர்த்தப்பட்டு மஜ்லிஸ் தொடங்கு கிறது. இதில் மஹான் பஸீர் அப்பா அருளிய ஞானப்பாடல்கள் பாடி, இறை திக்ர் நிகழ்வு களுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தர்காவின் கலீபாக்கள் த.உ. அபூ பக்கர் சாஹிபு, த.உ. ஹாசிம் சாஹிபு மற்றும் தர்காவின் டிரஸ்ட்டிகள், ஹக்தார்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.