Take a fresh look at your lifestyle.

மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் சோலார் புறக்காவல் உதவி மையம், கண்காணிப்பு கோபுரம்: * கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்

60

சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலார் புறக்காவல் உதவி மையங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரத்தை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை நகரில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் பொதுமக்கள் பாதுகா ப்பிற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், புதிதாக காவல் கண் காணிப்பு கோபுரம் மற்றும் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், இரவு நேரங்களில் எளிதில் பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும், சி.சி.டி.வி கேமரா வசதியுடன் கூடிய 4 “Solar- Powered Out Post” கள் மெரினா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை மற்றும் மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் இவற்றின் செயல்பாட்டை துவங்கி வைத்தார். மேலும் மெரினா மணற்பரப்பில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்களை சங்கர்ஜிவால் வழங்கினார்.

மேலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையங்களை இரவு நேரங்களில், பொது மக்கள் எளிதாக அடையாளம் கண்டு உதவி பெறவும், பண்டிகை காலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது, பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும், அவசர தேவைக்கு பொதுமக்கள் எளிதாக காவல் உதவி மையத்தை அணுக வும், கூட்ட நேரங்களில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுப்பிடிக்கவும் இந்த காவல் உதவி மையங்கள் (Solar- Powered Out Post) முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிகழ்ச்சியில் சென்னை நகர கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்கா, இணை ஆணையாளர்கள் சிபிச் சக்ரவர்த்தி, திஷா மிட்டல், துணை ஆணையாளர்கள் மகேந்திரன், ரஜத் சதுர்வேதி, ரோகித் நாதன் ராஜகோபால், தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.