Take a fresh look at your lifestyle.

மெட்ரோ ரயிலில் பாய்ஸ் கிளப் சிறார் சிறுமிகளுடன் குதூகலப் பயணம் மேற்கொண்ட இணைக்கமிஷனர்

165

சென்னை நகரில் காவல் சிறார் மன்றத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளுடன் சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி மெட்ரோ ரயிலில் குதூகலப் பயணம் மேற்கொண்டது சிறுவர்களை நெகிழ வைத்தது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், (GCP-Police Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரியாக சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில் சென்னை நகரில் அண்ணாநகர், புளியந்தோப்பு, மாதவரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் மாவட்டங்களில் சிறார், சிறுமியர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்கள் மெட்ரோ ரயிலில் மகிழ்ச்சி பயணம் (Joy Ride) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று (08.05.2022) காலை சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களின் ஷெனாய் நகர் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் மகிழ்ச்சி பயணத்தை துவக்கி வைத்து சிறுவர்களுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா நகர் துணை ஆணையார் சிவபிரசாத் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் சிறுவர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 50 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள் மெட்ரோ இரயிலில் குதுகலமாக பயணித்தனர்.

இதே போன்று கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் கார்த்திக்கேயன் இன்று (08.05.2022) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வடக்கு மண்டல காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களின் சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் மகிழ்ச்சி பயணத்தை துவக்கி வைத்தார். வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 50 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள் மெட்ரோ ரயிலில் குதுகலமாக பயணித்தனர்.