சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நடத்தும் 22-வது உலக கோப்பை கால்பந்து தொடர் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிக்கும் இந்த ‘கால்களின்’ திருவிழாவை பிரம்மாண்டமாக நடத்த கத்தார் முழு அளவில் தயாராகி உள்ளது. இதற்காக கத்தார் சுமார் 12 ஆண்டுகளை செலவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த நாடுகளை பின்னுக்குத்தள்ளி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது கத்தார். வரலாற்றில் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தார் உலக கோப்பை கால்பந்து திருவிழாவை நடத்துகிறது.